இனி ஆசிரியர்களுக்கும் Exam! Pass ஆகாவிட்டால் ஊதிய உயர்வு ✂ கட்!

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஒவ்வொருஆசிரியரின் தகுதி மற்றும் திறனை சோதிக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலானபுதிய கல்வி கொள்கையைவெளியிட்டுள்ளது. 


அதில் மாணவர்கள் கல்வி திறனை வளர்க்க ஆசிரியர்களுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்துள்ளது.இந்தியாவில் பள்ளி ஆசிரியர்களின் திறமையின்மையால், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மற்றும் திறன் குறைவாக இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய தனியாக ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்க வேண்டும். தகுதி தேர்வின் அடிப்படையில்தான் புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும்.  (தமிழகத்தில் ஏற்கனவே இந்த நடைமுறை இருக்கிறது). அனைத்து ஆசிரியர் கல்வி நிறுவனங்களும் இனி மத்திய அரசின் அங்கீகாரத்தை கண்டிப்பாக பெற வேண்டும்.

தேசிய அளவில் ஆசிரியர் கல்வியியலுக்கான பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும். ஒவ்வொரு ஆசிரியரின் தகுதி மற்றும் திறனை சோதிக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் திறன்தேர்வு நடத்தப்படும். இதில் ஆசிரியர்கள் கட்டாயம் பாஸ் செய்ய வேண்டும். திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்குமட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும். தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு 'கட்'.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு பாடத்திட்டங்கள் இருப்பதால் தேசிய அளவில்மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுகிறது. எனவே தேசிய அளவில் கணிதம், அறிவியல், ஆங்கிலம் என்று 3 பாடங்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம்வகுக்கப்படும். இந்த 3 பாடங்களை தவிர மொழிப்பாடம், சமூக அறிவியல், தொழில்கவ்வி பாடங்களை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம். 

6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் வழிக்கல்வி கட்டாயமாக்கப்படுகிறது. இது உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்து புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுவரை மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதி வந்த நிலையில், இப்போது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர்களும் திறன் தேர்வு எழுதவேண்டும் என்பதால் ஆசிரியர்கள் தங்களது திறனை தொடர்ந்து மேன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படப்போகிறது.

Popular Posts